About Us

  • pic 1

ஸ்ரீ வாராஹி கணேஷ்

எனது பெயர் ஸ்ரீ வாராஹி கணேஷ். ஸ்ரீ வித்யா தீட்சையை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மூலம் முறையாகப் பெற்று சுமார் 18 வருடங்களாக ஸ்ரீ வாராஹி தேவியை உபாசித்து வருகிறேன். ஸ்ரீ மகா வாராஹி யாகத்தை 14-5-2014 சித்ரா பௌர்ணமி அன்று நடத்தி ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் எளிமையான முறையில் உலக நன்மை கருதி மகா வாராஹி மகா யாகம் செய்து வருகிறேன். ஸ்ரீ வாராஹி தேவியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று அத்தேவியையே ஜோதிடத் துறையில் குருவாக ஏற்று 14 ஆண்டுகளாக ஜோதிடத்தையே தொழிலாகக் கொண்டு இருக்கிறேன்.

வாக்யம் திருக்கணிதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று சுமார் 750 ஜாதகங்களைக் கணித்துத் தந்திருக்கிறேன். மேலும் சோளிப் ப்ரஸ்னம் பார்ப்பதிலும், எண் கணித முறை மற்றும் நட்சத்திர முறையிலும் அதிர்ஷ்ட பெயர் வைத்துத் தருவதில் முறையாக பயிற்சி செய்துள்ளேன்.

அனைவரும் நலமாக வளமாக வாழ எனது உபாசனா தேவி ஸ்ரீ வாராஹியை மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

  • pic 1

தங்க.தமிழரசன்

ராஜயோகம் கம்ப்யூட்டர் ஜாதக மையம் 2002-ல் தொடங்கப்பட்டு பின் ராஜயோகம் (ஆன்லைன்) திருமண மையமாக விரிவுபடுத்தப்பட்டது. எங்கள் வெப்சைட்: www.rajayogammatrimony.com என்பதாகும். சென்னை அம்பத்தூரில் இருந்து செயல்படுகின்றோம். இங்கு 2 முறை மணமகன், மணமகள் சுயம்வரம் நடத்தியுள்ளோம். மற்றும் ரெய்கி குழுவினருடன் இணைந்து முதியோர் இல்லம் மற்றும் குழந்தை காப்பகத்திற்கு பயிற்சி அளித்துள்ளோம். அடியேனது பெயர் தங்க.தமிழரசன். BA, PGDHRM படித்துள்ளேன். L & T என்ற நிறுவனத்தில் 25 ஆண்டு காலம் பணிபுரிந்து 2002-ல் ஓய்வு பெற்றவன். கடந்த 14 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் மூலம் திருக்கணித முறையில் முழு ஜாதகம் (60 to 70 பக்கம்) கணித்து புத்தக வடிவில் கொடுத்து வருகிறோம். அதன் விலை ரூ.600. வெளியூருக்கு போஸ்டல் செலவு தனி. இவ்வாறு ஜாதங்கங்களை கேட்பவர்களுக்கு அனுப்பிவருகிறோம்.

தேவைப்படுபவர்கள் அவர்கள் பெயர், பிறந்த தேதி, நேரம், ஊர் முதலிய விபரங்களை E-mail மூலம் தெரிவித்தால் அனுப்பிவைக்கப்படும். அதற்கான தொகையை கீழ்க்கண்ட எங்கள் Bank A/c-ல் செலுத்தினால் அனுப்பி வைப்பது எளிது.

நலம்! நாடுவதுவும் அதுவே.

  • pic 1

Name of the A/c holder : T.TAMILARASAN
A/C NO : 10402792405
NAME OF THE BANK : STATE BANK OF INDIA
BRANCH : AMBATTUR (CHENNAI)
IFS CODE : SBIN0000987

Copyright © www.rajayogammatrimony.com/astro | All rights reserved. Powered by WinOVM