About Astro

  • pic 1

ராஜயோகம் அஸ்ட்ரோ மையம்

உலகிலேயே ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், வாழ்க்கை நெறிமுறையில் உயர்ந்து விளங்கிய புண்ணிய பூமி, தெய்வ பூமி இந்தியாவாகும். இதற்குக் காரணம் தெய்வ அவதாரங்களும், ரிஷிகளும். அவர்கள் மனித இனத்திற்குத் தேவையான அனைத்து நெறிமுறைகளையும், ஒழுக்கத்தையும், தர்மத்தையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் போதித்ததோடு அதன்படி வாழ்ந்து காட்டினார்கள். மனிதப் பிறவியில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகள், நிறை, குறைகளுக்கு காரணம் முன்வினைப் பயன் என்றும் கிரக நிலை அமைப்பு மற்றும் நகர்தலினால் ஏற்படுகின்ற தாக்கமுமே எனக் கண்டுபிடித்தனர். இதிலிருந்து மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள இறைவனின் மூச்சாகிய வேத அலைகளைக் கண்டு வேதத்தின் 5-வது அங்கமாகிய ஜோதிட சாஸ்திரத்தைப் படைத்தனர்.

  • pic 1

ஜோதிட சாஸ்திரம்

வான மண்டலத்தில் அநேக கோடி நட்சத்திரங்கள் இருப்பினும் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களைக்கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. நவக்கிரகங்கள் அனைத்தும் இந்த 27 நட்சத்திரங்கள் உள்ள பாதையில்தான் சஞ்சாரம் செய்கின்றன. இவைகள்தான் பூமியில் வாழும் சகல உயிர்களின் வாழ்வில் தொடர்பு கொண்டுள்ளன. ஜாதகம் பார்க்கும் பொழுது அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் பலம், பலவீனம் அறிந்து தசா புத்தி பலன், கோச்சார பலன்களையும் நன்கு பரிசீலித்து நன்மை, தீமைகள் எந்தெந்த காலத்தில் வரும் என மிக துல்லியமாக கூறலாம். ஆகவே நாம் எந்த சுபகாரியம் செய்வதானாலும் ஜாதகத்தைப் பார்த்து நல்ல அனுகூலமான நாளில், சுபஹோரையில் நடத்துதல் வேண்டும். ஆகவே நாம் நம் வாழ்க்கையில் வளம் பெற ஜோதிடம் மற்றும் பிரஸ்ன சாஸ்திரம் பார்த்து நலமுடன் வாழ்வோமாக.

  • pic 1

தேவசோளி ப்ரஸ்ன ஜோதிடம்

ப்ரஸ்னம் என்பதற்கு கேள்வி எனப்பொருள். ஒருவர் அனுபவிப்பது முன்வினையா? (அல்லது) பிராரப்த கர்மமா? (அல்லது) முன்னோர்கள் சாபமா? என்பதை மிகத் துல்லியமாக அறிய உதவும் சாஸ்திரம்தான் இந்த சோளி ப்ரஸ்னம். சாபங்கள் 12 விதம். அவை:

(1) தெய்வ சாபம், (2) குலதெய்வ சாபம், (3) சர்ப்ப சாபம், (4) பித்ரு சாபம், (5) மாதுர் சாபம், (6) குரு சாபம், (7) பிரேத சாபம், (8) வாக்கு சாபம், (9) பிராம்ண சாபம், (10) செய்வினை, (11) சத்ரு சாபம், (12) திருஷ்டி.

இதில் எது நமக்குத் தடையாக உள்ளது என அறிந்து முறையாக பரிகாரம் செய்து தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு ராஜயோக வாழ்வு வாழலாம்.

  • pic 1

பரிகாரம்

தடைகள் மற்றும் சாபங்களுக்கு பரிகாரம் – பூஜை, ஹோமம், மந்திர ஜெபம் செய்வதே. சோளிப் ப்ரஸ்னம் மூலம் சாபப் பரிகாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின் பரிகாரம் சொல்லப்பட்டு அவர்கள் விரும்பும் பட்சத்தில் வேதம் தெரிந்தவர்களைக்கொண்டு பரிகார ஹோமத்திற்கு ஏற்பாடு செய்துத் தரப்படும்.

எங்கள் செல் நம்பர்: 91762 14322
இ-மெயில் ID: astromaiyam@gmail.com

Copyright © www.rajayogammatrimony.com/astro | All rights reserved. Powered by WinOVM